Categories
உலக செய்திகள்

ஆட்சி மாற்றத்திற்கு ஓகே …. ஆனால் மீண்டும் வருவேன் – ட்ரம்ப்…!!

அதிகார மாற்றத்திற்கு ஒத்துப்போவதாகவும், மீண்டும் வருவோம் என்றும் ட்ரம்ப்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட பிறகுதான் ஒருவர் அதிபர் ஆக முடியும். ஆனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தை தடுக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

மேலும் வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பேசிய பின் ட்ரம்பின் வலைத்தள கணக்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைக் காடாக மாறியுள்ளது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரபட்ட பின் நாடாளுமன்றம் மீண்டும் கூடி ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அதிகார மாற்றத்தை ஒத்திவைப்பதாக ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இந்த முடிவை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் அதிகார மாற்றத்திற்கு நான் சம்மதிக்கிறேன். இதோடு அனைத்தும் முடிந்து போவதில்லை. விரைவில் மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |