இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . இவர் கடந்த 20 ஆண்டுகளில் 8 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் . இருப்பினும் இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியமாக இருந்து வருகிறது . கடந்த ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘என் ஜி கே’ திரைப்படம் வெளியானது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘மன்னவன்’ வந்தானடி ஆகிய படங்கள் ஒரு சில ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி உள்ளது .
கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்டது . இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா ,ரெஜினா ,பிரேம்ஜி அமரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து இந்த படம் தற்போது ஒடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.