Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனாளர்களே! இதை நீங்கள் செய்யாவிட்டால்…. உங்கள் அக்கௌன்ட் நீக்கப்படும்…!!

வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதனுடைய பாதுகாப்பு கொள்கைகளையும், பயன்பட்டு விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பு தொடங்கி ஆரம்பித்துள்ளது. மேலும் பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க இந்த அப்டேட்களை வெளியிட்டுள்ளதாக தெரிவவித்துள்ளது. வாட்ஸ்அப் அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

பயனாளர்களின் செல்போனுக்கு அனுப்பும் இந்த நோட்டிபிகேஷனை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. எனவே பயனர்கள் வாட்ஸ் அப்பில் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் அவர்களின் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ்அப் பயனர்கள் மிகுந்த அச்சத்துடன் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

Categories

Tech |