பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் உடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிக பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு பேட்டியில், “மூளை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. அது பொதுவானது. ஆனால் பாலியல் அச்சம்தான் தனித்தன்மையானது. அந்த வகையில் பெண்களிடம் கூடுதலாக உள்ள கவர்ச்சியை எனக்கு பிடிக்கும். அதை போற்றுகிறேன்” என்று சொன்னதுடன் “பெண்களின் மூளை அல்ல, அவர்களின் உடல்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் ” என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக தொடர்ந்து பாலுணர்வு படங்களை இயக்கி வரும் இவரின் பேச்சுக்களும் தொடர் சர்ச்சையாகி வருகின்றன. இவர் கூறிய இந்த கருத்துக்கு அனைத்து பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர் கூறிய இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.