அரசு பணியில் இருந்து விடுப்பு அறிவித்த சகாயம் ஐஏஎஸ் அடுத்த கட்ட பணிகளை குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சகாயம் ஐஏஎஸ்க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகள் எதுவும் வழங்கவில்லை எனவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது பணிக் காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையில் விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசுக்கு சகாயம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அரசு பணிகள் குறித்து சகாயம் தெரிவித்தபோது விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன் என சகாயம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.