மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள ‘கால்ஸ்’ பட டீசர் சாதனை படைத்துள்ளது .
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் ,சின்னத்திரை தொடர்களில் நடிகையாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சித்ரா . இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது . இதையடுத்து சித்ரா இறப்பதற்கு முன் நடித்து முடித்த ‘கால்ஸ்’ படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கியது . இயக்குநர் விஜய் சபரிஷ் இயக்கியுள்ள இந்த படத்தை இன்பினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்தில் நடிகை சித்ராவுடன் இணைந்து நிழல்கள் ரவி, தேவதர்ஷினி ,டெல்லி கணேஷ் ,ஸ்ரீ ரஞ்சனி ,ஜீவா ரவி, ஆர் சுந்தர்ராஜன் ,வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
இந்த படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார் . இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கால்ஸ் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . தற்போது அந்த டீஸர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . இதுகுறித்து இயக்குனர் சபரிஷ் ‘சித்ரா நம்முடன் இல்லை என்றாலும் அவர் இருந்திருந்தால் எத்தனை அன்பையும் ,ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே அளவு ஆதரவையும் ,அன்பையும் தந்துள்ளார்கள் . மக்களுக்கு நன்றி’ என கூறியுள்ளார் .