குட்டையில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் பாண்டியன்குப்பத்தில் உள்ள ஒரு குட்டையில் 40 வயது நிரம்பிய ஆண் நபர் தவறி விழுந்ததை கவனித்த ஊர்மக்கள் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த வீரர்கள் குட்டையில் விழுந்த நபரை இரண்டு நாட்கள் தேடி வந்த நிலையில் நேற்று அவர் பிணமாக மிதந்ததை கண்டு பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர்.
இதனைதொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக மிதந்தவரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த நபர் குறித்து எந்த தகவலும் அறியாத நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.