உலகின் பல நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது .
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து உருவாகிய புதிய வகை உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட வீரியமிக்கதாகவும், வேகமாகவும் பரவி வருவதாக கூறப்படுகின்றது.
இதனால் பல நாடுகள் ப்ரிட்டனினுடனான விமான சேவைகளுக்கு தடை விதித்தது. தற்போது இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் புதிய கொரோனா உருவாகியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து இந்த புதிய வகை கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுமா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.