உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.
நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடும் சம்பவம் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சிலர் மொபைலில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை உங்களிடம் இருந்து வாங்கி திருடுகின்றனர். ஒரு சிலர் ஆன்லைன் ஹேக்கிங் என்று கூறி பணம் திருடப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பு வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்கள் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி வங்கியின் அலட்சியம் அல்லது தவறு காரணமாக ஏற்பட்ட இழப்பை வங்கி ஈடு செய்ய வேண்டும். 2017-18 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மோசடி நடந்து மூன்று நாட்களுக்குள் வங்கியில் புகார் அளித்தால் வங்கி, வாடிக்கையாளருக்கு பணம் முழுவதையும் ஈடுசெய்யும். 4 முதல் 7 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும். திருடப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு புகார் அளித்தால் வங்கி எந்தவித பொறுப்பையும் ஏற்காது. ஆகவே உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள்.