Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்பு வேணுமா…? 15 ஆயிரம் லஞ்சம் கொண்டு வா… பிளான் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புதுறை…!!

குடிநீர் இணைப்புக்காக 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈ.பி.பி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி இரண்டாம் மண்டல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்த ராஜபாளையத்தை சேர்ந்த செல்லத்துரை முரளியிடம் 15 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி முரளி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முரளியிடம் கொடுத்து இரண்டாம் மண்டல அலுவலகத்திற்கு சென்று செல்லதுரையிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி முரளி செல்லதுரையிடம் பணத்தை கொடுத்துள்ளார். அதனை வாங்கிய செல்லதுரை பணத்தை பத்திரபடுதும்போது மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா, இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோரது தலைமையில் செல்லதுரையை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |