இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசையா. இவருடைய மகன் ஜானி(32). ஜானி சோமாசிபாடியில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார் . அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த லாரி ஜானி சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் ஜானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.