ஸ்கூட்டரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னால் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, சாய்நாதபுறம் அன்பு இல்லம் அருகில் வைத்து கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டரின் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தினால் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும், கணேசனும் படுகாயமடைந்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த பொழுது கணேசன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் விபத்துக்கு காரணமான அந்த இரண்டு வாலிபர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டியது வேலப்பாடி சேர்ந்த தாமோதரன்என்பவரும், மற்றொருவர் கண்ணன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.