கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். மாரிமுத்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த பானுப்ரியா அவரது தாய் வீட்டிற்கு சென்று அங்கு யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.