ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால், அதை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 13ம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக நாடு முழுவதும் முன் களப்பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து மக்களின் உயிர் காப்பது ஒன்று தங்கள் முழுமுதல் நோக்கம் என்று சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.