சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் பண மோசடி காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பளம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேம்நாத் உடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சித்ராவின் தற்கொலைக்கு கணவர்தான் காரணம் எனக்கூறி நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து 6 நாட்கள் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி இரண்டு பேரிடம் 1.5 கோடி மோசடி செய்த வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள நிலையில் அவர் மீதான இந்த வழக்கு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.