Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை! தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து…. சுகாதார செயலாளர் பரபரப்பு பேட்டி…!!

பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவது எப்படி  அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பு மருந்துகளுக்கு அரசு அவசர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த காகங்களில் ஆபத்தான வைரஸ் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கேரளாவிலும் பறவைக்காய்ச்சல் தீவிரமா பரவி வருகின்றது.

எனவே கேரளா – தமிழக எல்லையில்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பரவியுள்ள பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என்று தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பறவைக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |