Categories
அரசியல்

“மேடையில் தடுமாறுறாரு” எழுதி பார்த்து பேசட்டும்… ஸ்டாலினுக்கு தபாலில் சிலேட்டு, குச்சி…!!

ஸ்டாலின் மேடையில் தடுமாறுவதால் அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சிலேட்டு மற்றும் குச்சிகள் கொடுத்துள்ளனர்

திருப்பரங்குன்றம் அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக ஸ்டாலினுக்கு இரண்டு வாய்ப்பாடு புத்தகங்கள், இரண்டு சிலேட்டுகள் மற்றும் எழுதுவதற்கான குச்சிகளை தபால் மூலமாக அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “ஸ்டாலின் அவர்கள் மேடையில் பேசும்போது தடுமாறுகிறார். அவர் சிலேட்டுகளில் எழுதி பார்த்து பின்னர் சரியாக பேசலாம். அதேபோன்று வாய்ப்பாடுகளை படித்துவிட்டு சரியான கணக்குகளை கூறலாம் என்பதற்காகத்தான் ஸ்டாலினுக்கு தபாலில் அனுப்பி வைத்தோம்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |