உலககோப்பையின் கிங்மேக்கர்களாக பவுலர்கள் திகழ்வார்கள் என இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார் .
நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா உலகக்கோப்பை போட்டி குறித்து பேட்டியளித்துள்ளார் அவர் கூறியதாவது,
உலக கோப்பை போட்டியை பொருத்தவரையில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை அணிக்கு பெற்று தருபவர்களாக இருந்தாலும், பவுலர்கள் தான் கிங் மேக்கராக இருக்கப் போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் மைதானம் ஆனது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான முறையில் அமைந்திருக்கும்.
மேலும் ஸ்பின் பவுலர்களுக்கும் ஏற்றது போல் அமைந்திருக்கும். ஆகையால் பேட்ஸ்மேன்கள் எத்தனை ரன்கள் அடித்து இருந்தாலும் போட்டியை மாற்றியமைக்கக்கூடிய ஆட்டக்காரர்களாக பவுலர்கள் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.