Categories
சினிமா தமிழ் சினிமா

திரைக்கு வருவதற்கு முன் இவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா..? மாகாபா ஆனந்தின் திரைப்பயணம்..!!

மாகாபா ஆனந்த் திரைக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமானவர் மாகாபா ஆனந்த். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. காமெடி கலந்த அவரது பேச்சுக்கு தனி இடம் உண்டு. அவர் இந்தத் துறை வருவதற்கு முன்பு சுவற்றில் போஸ்டர் ஓட்டும் தொழில் எல்லாம் செய்து வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. ரேடியோ மிர்ச்சியில் ஒரு ஆர்ஜேஆர் பணியாற்றிவந்த ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல மாப்புல பாடல் ஒளிபரப்பிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் சினிமா காரம் காபி மூலம் விஜய் டிவியில் நுழைந்தார்.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு நவரசத் திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். வாழ்வில் படிப்படியாக முன்னேறி இவருக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் இவர் மனைவி என்று பல மேடைகளில் புகழாரம் கூறியுள்ளார். விருது பெறும்போது தன் மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விஸ்காம் படித்த ஏழை மாணவர்களுக்கு ஆலோசகராகவும் இவர் இருந்து வந்துள்ளார்.

Categories

Tech |