Categories
அரசியல் மாநில செய்திகள்

MLA_வாக பதவியேற்ற 9 பேர் “தப்பியது அதிமுக அரசு” பெரும்பான்மை கிடைத்தது..!!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக_வின் 9 வேட்பாளர்கள் MLA_வாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில்  , அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக_வின் இந்த வெற்றியால் அரசுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

Image result for சட்டமன்றம்

தமிழக சட்ட பேரவையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் வெற்றிபெற்ற அதிமுகவின் 9 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் பதவி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |