Categories
சினிமா தமிழ் சினிமா

ஆன்லைனிலேயே உடற்பயிற்சி செய்த சூர்யா… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்…!!!

நடிகர் சூர்யா அவரது உடற்பயிற்சியாளர்  மூலம் ஆன்லைனில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் . நடிகர் சூர்யா கொரோனா ஊரடங்கிலும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் . அவரை அவரது உடற்பயிற்சியாளர் நிர்மல் நாயர் ஆன்லைன் வீடியோ கால் மூலம் கண்காணித்து வருகிறாராம் . தற்போது ஒரு வீடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

suriya-gym-workout

இதுகுறித்து அவரது உடற்பயிற்சியாளர் வெளியிட்டுள்ள பதிவில் ஆன்லைனில் சூர்யாவுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு பிடிக்கவில்லை . ஆனால் சூழ்நிலை காரணமாக தான் சூர்யாவுக்கு பயிற்சி அளிக்கிறேன் . கொரோனா காலகட்டத்திலும் சூர்யா உடற்பயிற்சியின்  மீது வைத்திருந்த கவனமும் , ஒழுக்கமும் எனக்கு ஊக்கம் அளிக்கிறது . என்னை போன்ற பலருக்கு சூர்யா முன்மாதிரியாக உள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது ‌.

Categories

Tech |