Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலை மகரவிளக்கு பூஜை… வெளியான புதிய அறிவிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி…!!!

சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வருகின்ற 14ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை சபரிமலையில் நடைபெற உள்ளது. இதனால் கூடுதல் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை அனுமதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்களுக்கு இருந்தது.

இந்நிலையில் ,நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வருகின்ற 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. அதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யாத வருபவர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |