Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழக அரசு அனுமதி… திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

திரையரங்குகள்  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது .

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது . இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது ‌. தற்போது வருகிற பொங்கல் தினத்தில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . கடந்த வாரம் நடிகர் விஜய் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க  அனுமதிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

Cinemas opening, film industry hopes theatre releases will be back |  Entertainment News,The Indian Express

இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகள்  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . இந்த அறிவிப்பால் திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . அதைப்போல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |