தமிழகத்தில் அமைச்சர்கள் பற்றிய இரண்டாவது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர்கள் பற்றிய இரண்டாவது ஊழல் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்க உள்ளோம். எஃப் சி தரச்சான்று, வேக கட்டுப்பாட்டு கருவி கொள்முதலில் ரூ.2,300 கோடி ஊழல், ஜிபிஎஸ் கருவி வாங்கியதில் ரூ.1000 கோடி ஊழல், ஆம்னி பேருந்து உரிமம் வழங்குவதிலும் ஊழல் நடந்துள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.