இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு 2500 வழங்கப்படும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு திராட்சை, வெல்லம், முந்திரி ஏலக்காய் போன்ற தொகுப்புகளும் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், இதன்மூலம் 2.6 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இதற்காக 5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தொகுப்பு முற்பகல் 100 பேருக்கும், 100 பேருக்கும் என்ற வகையில் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் அனைத்து தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் 2500 மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி பொருத்து அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வந்து பரிசு தொகுப்பு வாங்கிச் செல்லவும். சமூக இடைவெளியை பின்பற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்டு வைத்திருப்பவர்கள் கைவிரல் ரேகை தேவையில்லை எனவும், காடு மட்டும் டோக்கன் கொண்டு வந்தால் மட்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.