சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் பற்றி பெண் ஜோதிட ஜெயஸ்ரீ பாலன் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. அவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது சித்ராவின் கணவன் ஹேம்நாத் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல துருப்புகள் சிக்கியதால், அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகை சித்ராவின் மரணம் பற்றி பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் என்பவர் புதிய பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சித்ராவின் மரணம் கொலையும் அல்ல, தற்கொலையும் அல்ல என கூறியுள்ளார். சித்ராவின் வீட்டை அவரது கணவர் அபகரிக்க பார்த்ததால், தன் கணவரை பயமுறுத்த நினைத்தே தூக்கில் தொங்குவது போல நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் விளையாட்டு விபரீதமாக முடிந்து விட்டது என அவர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.