பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசி உரையாடி வருகிறார்கள். உலகில் உள்ள அனைவரும் தற்போது செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31-ம் தேதி வரை நீடித்துள்ளது. அதன்படி ஜனவரி 31 வரை பிஎஸ்என்எல் இணையதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சிம் கார்டு வழங்கப்படுகிறது. எனினும் பயனர்கள் முதல் ரீசார்ஜ் 100 ரூபாய் சலுகையை பெற வேண்டும். மேலும் 186 ரூபாய் சலுகையை 199 ரூபாய் ஆகவும், 199 ரூபாய் சலுகையை 201 ரூபாயாகவும் மாற்றியுள்ளது. இந்த அறிவிப்பு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.