Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்கப்போறீங்களா…? அப்ப இது தான் சரியான இடம்… விலை குறைவு..!!

சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தால்கூட இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான மற்றும் தேவையான ஒன்று என்றால் அது வீடுதான்.

ஒரு வீடு என்பது அனைவரின் கனவாக உள்ளது. அனைவரும் எப்படியாவது ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இந்த விஷயத்தில் மும்பை மிகவும் விலை உயர்ந்தது.நைட் ஃபிராங்க் இந்தியா சொத்து குறித்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அகமதாபாத் நாட்டில் வீடுகளுக்கு மலிவான சந்தை, வீட்டு வசதி அடிப்படையில் வீட்டு விகிதம் 2020 ஆண்டு 24 சதவீதமாக இருந்தது. இது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2010-ல் 46 சதவீதமாக இருந்தது.

இதையடுத்து குறைந்த மற்றும் மலிவான சந்தைகள் என்றால் புனே மற்றும் சென்னை புனே மற்றும் சென்னையில் பொருளாதார வீதங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் 26 சதவீதத்துடன் இருக்கின்றது. சென்னையில் தற்போது வீடுகள் வளர்வதை விட அதிகமாக வணிக கட்டிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து நைட் மற்றும் பிரான்க் கூறுகையில் மும்பை 61 சதவிகித பொருளாதார விகிதத்துடன் மிகவும் விலையுயர்ந்த சந்தையாகும், அகமதாபாத், சென்னை மற்றும் புனே ஆகியவை ஒப்பீட்டளவில் மலிவானவை.

மும்பையில் வீடுகளும், 2010ஆம் ஆண்டு பொருளாதார விகிதம் 93 சதவீதமாக இருந்தது. 2020இல் 61 சதவீதமாக உள்ளது. வீட்டு கடனுக்கான வட்டி விகிதம், குடும்ப வருமானம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக வரும் காலங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |