Categories
உலக செய்திகள்

புத்தாண்டில் நடைபெற்ற திருமணத்தில்…. ராக்கெட் தாக்குதல்… மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்….!!

புத்தாண்டு அன்று நடைபெற்ற திருமணத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏமன் நாட்டில் உள்ள Hodeida என்ற நகரில் புத்தாண்டன்று விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு அரசாங்கமும், ஹவுதி போராளிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஏடன் விமான நிலையத்தில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புக்கு பின்னர் இரண்டு நாட்கள் கழித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட்டு வரும் நிதி உதவி அளிக்கும் கூட்ட ஆணையத்தின் அரசாங்க பிரதிநிதியான jeneral sadek douid  இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் இது குடிமக்களுக்கு எதிரான மோசமான தாக்குதல் என்று ஹவுதிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் Hodeidaவில் ஹவுதி குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் முகமது அயாச்சே  கூறியுள்ளதாவது, ஆக்கிரமிப்பு சக்திகள் எப்போதும் தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு அடுத்தவர்களின் மேல் பழியை போடுவதற்கு தயங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |