நாடு முழுவதும் ஜனவரி 6ஆம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு செலுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் அரசு விவசாயிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் உள்ள நிலையில், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ஜனவரி 6ஆம் தேதி நாடு முழுவதும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.