கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழமொழியை தவறாக கூறிய சம்பவம் கூட்டத்தில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்” என்ற பழமொழியை “கூரை ஏறி வைகுண்டத்துக்கு போனவன்” என்று தவறாக கூறியுள்ளார். அதனைக் கேட்டு உடனே உஷாரான கட்சியினர் பழமொழியை சரியாக சொல்லிக் கொடுத்தனர். அதன் பிறகு மீண்டும் “கூரை ஏறி கோழி பிடிக்காதவன், கூரையேறி வைகுண்டத்திற்கு போன மாதிரி” என்று கூறினார். இந்த சம்பவம் கூட்டத்தில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.