பாரா விளையாட்டு குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காஷ்மீரில் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கிய BSF படைப்பிரிவினர் கன்னியாகுமரியில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளிடம் பாரா விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த BSF படைப்பிரிவை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 30 மாற்றுத்திறனாளிகள் கடந்த 18ம் தேதி காஷ்மீரில் இருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 842 கிலோமீட்டர் தூரத்தை 44 நாட்கள் பயணத்தில் நிறைவு செய்த BSF படைப் பிரிவினர் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தனர். விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்த படை பிரிவினரை திருவனந்தபுரம் BSF ஐஜி பேபி ஜோசப் அதிகாரிகள் வரவேற்றனர்.