கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன்பின் கைதான அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மதுபோதையில் குடித்துவிட்டுவண்டி ஓட்டி சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் மதன்ராஜ் தன் வண்டியை கேட்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வண்டி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் கிரேசியா (வயது 29) தன் கணவருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் இருந்த மதன்ராஜ் மோட்டார் சைக்கிள் உட்பட 3 மோட்டார் சைக்கிள்களையும், செல்போன் மற்றும் அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடியது தெரிய வந்துள்ளது.
அதன்பின் அவர்களை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்கள் என் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் திருட்டு வழக்கில் கணவருடன் கைதான பெண் போலீஸ் கிரேசியாவை பணியிடை நீக்கம் செய்தனர். காவல் நிலையத்திலேயே பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து திருடி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.