Categories
மாநில செய்திகள்

இனி இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் புதிய உருமாறிய கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கலன்று மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்களுக்கு அனுமதி இல்லை. ஜனவரி 1 முதல் 200 பேர் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |