Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

48 நினைவுச்சின்னங்கள்… ஒரு நிமிடத்தில் கூறி அசத்தல்… நான்காம் வகுப்பு மாணவியின் சாதனை…!!

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி 48 நினைவு சின்னங்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகளுக்கு தயாநிதிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நான்காம் வகுப்பு படித்து வந்த தயாநிதிதா வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை வெறும் ஒரு நிமிடத்தில் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியன் ரெக்கார்டு புக் நிறுவனத்தால் இந்நிகழ்ச்சியானது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் முப்பது வரலாற்று நினைவுச் சின்னங்களின் பெயர்களையும், அதனை கட்டியவர்களின் பெயர்களையும் கூற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த ஒரு நிமிடத்தில் இந்தியாவில் உள்ள 48 வரலாற்று நினைவுச் சின்னங்களின் பெயர்களையும் அதனை கட்டியவர்களின் பெயர்களையும் மாணவி தயாநிதிதா கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து இந்திய சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் விவேக் அவர்கள், இப் புதிய சாதனையைப் படைத்த தயாநிதிதாவிற்கு அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.

Categories

Tech |