Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு…. எதிராக அதிரடியான அறிவிப்பை… வெளியிட்ட நாடு…!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு எதிராக அதிரடியான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதியாகும் விமானத்திற்குரிய பாகங்கள் மற்றும் ஒயின்கள் போன்ற சில ஐரோப்பிய ஒன்றியங்களின் தயாரிப்புகளுக்கு கட்டணங்களை அதிகரிப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான உற்பத்திக்கு தேவையான பாகங்கள் மற்றும் ஒயின்கள் மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த காக்னாக்ஸ் மற்றும் பிற பிராண்டிகள் ஆகியவற்றின் கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்த அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்று USTR அறிவிக்கவில்லை. ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் அநியாயமான முறையில் கட்டணங்களை அதிகம் விதித்துள்ளது என்பது நினைவுக்கூரத்தக்கது. மேலும் இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |