மதசார்பற்ற கொள்கைகளை பின்பற்றுவதில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது என்று திருமாவளவன் பேசியுள்ளார் ..
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் திருமாவளவன் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் அவர் பேசுகையில் ,தமிழகத்தை பண்பட்ட மாநிலமாக மாற்றியதில் முக்கியப் பங்கு அண்ணாவுக்கும் ,கருணாநிதிக்கும் உண்டு .
மதசார்பற்ற கொள்கைகளை கடை பிடிக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவிற்கே மதசார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்க வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.