Categories
சினிமா தமிழ் சினிமா

மணமக்கள் கோலத்தில்…. சரத்குமார் – ராதிகா ஜோடி சாமி தரிசனம்…. வெளியான புகைப்படம்…!!

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மணமக்கள் கோலத்தில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்குமாருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மகள் வரலட்சுமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சிவகங்கை காரைக்குடி அருகே எங்களுடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.

தற்போது அந்த கோவிலுக்கு செல்ல இயலாத காரணத்தினால் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை தரிசனம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா குறைந்ததால் நேர்த்திக்கடனாக காஞ்சிபுரத்தில் உள்ள அம்மனை தரிசித்து சென்றிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மணமக்கள் கோலத்தில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |