பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா பரவி வருவதால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் தர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உரு மாறியுள்ள புதிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டனில் இருந்து புதிய வகை கொரோனா பரவி வருவதால், தடுப்பூசியின் தேவை அதிகரிக்கும் என்பதால், பிரிட்டனில் ஒப்புதல் வழங்கப்பட்டதாலும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு இந்தியாவிலும் ஒப்புதல் தர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.