சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான தேதி வெளியாக உள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வுகள் மாநிலத் தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திலேயே பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அதேசமயம் தமிழகத்தில் இந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநில பாடத் திட்டங்களுக்கு முன்னதாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் தேர்வுக்கான தேதியை மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தகவல் வந்தது.
இதையடுத்து சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று மாலை 6 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.