Categories
தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டம் அடிக்கும் என ஆசை…! லாட்டரி சீட்டுகளை விற்ற முதியவர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏனாதி கரம்பை என்ற பகுதியில் ராஜாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இம்முதியவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு அருகிலுள்ள ஆவனம் கைகாட்டி என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்முதியவரிடருந்து ரூபாய் 2500 மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன்பின் அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |