இரண்டு நபர்கள் நிறுத்தப்பட்டிருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நேற்று காலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. மேலும் இந்த காரின் எஞ்சின் இயக்க நிலையிலேயே இருந்துள்ளது. மேலும் அந்த காரில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். அதன் பின்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, இந்த வாகனம் முந்தைய நாள் இரவில் நிறுத்தப்பட்டிருக்கலாம்.
மேலும் காருக்குள் உயிரிலிருந்து நிலையில் இருக்கும் இருவர் கடந்த திங்களன்று இரவு 9;30 மணியளவில் சுடப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் காரினுள் உயிரிழந்த நிலையில் இருந்த இரண்டு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வு செய்யவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம்உடனடியாக தெரிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.