நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் . இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா உட்பட பலர் நடித்துள்ளனர் . தமன் இசையமைத்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளையும் படக்குழு ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது . இந்நிலையில் ஈஸ்வரன் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதையடுத்து படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.