திருச்சியில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் கலந்து கொண்டார். அதில், “தூங்கும் தமிழகத்தைத் தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டதாக” கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் கட்ட பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கினார் . சின்னப்பா பூங்கா, பழைய பேருந்து, புதிய பேருந்து நிலையம் வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு பின்பு லேணா திருமண மண்டபம் வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியது, தமிழகத்தின் அவலத்தை அரசிடம் பலமுறை கூறினாலும் அவர்களது காதுக்கு கேட்கவில்லை. சமீபத்தில் லஞ்சப் பட்டியலை வெளியிட்டேன். ஆனால் அதற்கான சரியான பதில் இன்னும் வரவில்லை.
அதுமட்டுமின்றி திருச்சியில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டேன். அடுத்தபடியாக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் காத்துக்கொண்டிருக்கிறது.பெரும் நோயால் தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையம் சம்பாதிக்க வரவில்லை. தமிழக மக்களுக்கு தேவையானவற்றை தருவதற்கு வருகிறது. முதலில் கவிஞர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலரும் இணைந்து வருகிறார்கள். “தூங்கும் தமிழகத்தைத் தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது”.
மக்கள் நீதி மய்யம் முழுவதும் டிஜிட்டல் அலுவலகமாக மாறவுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் இலவச இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்.திராவிடம் என்பது நாடு தழுவியது. இரண்டு பேருக்கு மட்டுமே உரிமையானது அல்ல. மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலேயே திராவிடம் உள்ளது.நாளை நமதே. என்றுகூறி பிரசாரத்தை நிறைவு செய்தார் .