Categories
டெக்னாலஜி பல்சுவை

கணினி பயன்படுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். நம் வீட்டில் உள்ள டிவி போன்ற பொருட்களை மாதிரி கணினியும் ஒரு சாதாரண பொருளாக மாறிவிட்டது. அனைவர் வீட்டிலும் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் இலவசமாக விண்டோஸ் 10 ஓஎஸ்க்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்டோஸ் 7 விண்டோஸ் 8.1 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்குச் சென்று அப்கிரேட் செய்யலாம். ஜனவரி முதல் வாரத்தில் இந்த இலவச வாய்ப்பு நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது. அதனால் கணினி பயன்படுத்துபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் முந்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |