Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…” டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரச் சொன்ன இளைஞன்” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

ஆன்லைன் டேட்டிங் என்ற நட்பில் சிக்கி புனேவை சேர்ந்த ஒரு பெண் ஹோட்டலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா ஊரடங்கு என்பதால் எல்லாமே ஆன்லைன் மயமானது .அனைவரும் எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்துவருகின்றன. வீட்டிலிருந்தே பணி, கற்றல், நண்பர்களுடன் பேசுதல் ஆகியவை ஆன்லைனில் அதிகரித்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் மனம்விட்டு யாரிடமாவது பேச நினைப்பவர்கள் ஆன்லைன் டேட்டிங் முறையை பயன்படுத்துகின்றனர். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை உண்டாகலாம் என நினைத்து ஆன்லைன் டேட்டிங்கை தேர்வு செய்கின்றனர்.

ஆனால் சில இளம் ஜோடிகள் ஆன்லைன் டேட்டிங் முறையை பயன்படுத்தி தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். இது தற்போது உண்மையாக நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு பெண் ஆன்லைன் டேட்டிங் மூலம் ஒருவருடன் பேசியுள்ளார். கடந்த 26ஆம் தேதி புனேவின் ஹின்ஜெவாடியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்திக்க அந்த இளைஞர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த பெண்ணும் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றார். மேலும் அந்தப் பெண்ணிற்கு மது அருந்துமாறு அந்த வாலிபர் கட்டாயப்படுத்தி உள்ளார்.

ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவரை அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பிம்ப்ரி-சிஞ்ச்வாத் போலீசில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அபிஜித் என தெரிய வந்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கூறிய போது:” அவரை மகிழ்விக்க மறுத்தபோது என்னை தாக்கினார், என்னை உதைத்து, காலணியால் அடித்த என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த 26 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 11 மணி வரை சம்பவம் நடந்தது” என தெரிவித்தார். இதையடுத்து அபிஜித் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Categories

Tech |