சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தது விஜய் சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் உதவியாளரான சலீமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ரா இவரை எந்த படப்பிடிப்புக்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூடவே அழைத்து செல்வார். சலீம் சித்ராவை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதுதான் இவரது வேலையாம். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சித்ராவின் கணவர் சலீமை வேலையிலிருந்து தூக்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும் சலீம் வேண்டுமென்றே சித்ராவை ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இண்டர்நெட்டில் போடுவதாக ஹேம்நாத் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சலீமின் மூலம் தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.