Categories
உலக செய்திகள்

அதிகமான பனிப்பொழிவால்…. போக்குவரத்து பாதிப்பு…. பிரிட்டன் மக்கள் அவதி….!!

பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுபொருட்கள் ரத்தாகியுள்ளது. 

பிரிட்டனில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை டெலிவரி செய்வதை பல்பொருள் அங்காடிகள் ரத்து செய்துள்ளன. பனி பொழிவு அதிகமாக பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன. மேலும் பாதுகாப்புக்காக ஓட்டுனர்களும் சாலை பகுதிகளில் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் புதுவருட தினத்திற்கு முன்பு பனிப்பொழிவு 6 இன்ச் அளவிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவு பொருட்களை டெலிவரி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமையான இடங்களில் வசிப்பவர்களும், தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் பல இடங்களில் பலத்த மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக சூழ்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதால் Manchester, Gloucestershire, wiltshire மற்றும் Berkshire ஆகிய பகுதிகளில் போக்குவரத்திற்கான சூழல் ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளது. இதனிடையே தாங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரிட்டன் மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளார்கள்.

Categories

Tech |