மனித உடலின் பாகங்கள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் மனித உடலின் பாகங்கள் சிதறிக்கிடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் உடல் பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து அவை மனித உடலின் பாகங்கள் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் அரிசோனாவின் மற்றொரு பகுதியிலும் உடல் பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை கொலை வழக்காக பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளியை கண்டுபிடித்து விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதாக கூறியுள்ளனர். மேலும் Yavappai என்ற பகுதியில் உள்ள மருத்துவர் Dr.Jaffrey Nine என்பவர் இந்த உடல்பாகங்கள் அனைத்துமே மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் உடல் பாகங்கள் போன்று தெரிவதாக கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இது போன்று மருத்துவ கல்லூரியை சேர்ந்ததாக இருந்தாலும் உடல் பாகங்களை அவமதிப்பது பெரிய குற்றம். எனவே அதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.