Categories
மாநில செய்திகள்

Flash News: இன்னும் இரண்டு நாட்களில்… கடும் நடவடிக்கை… பொது அறிவிப்பு…!!!

சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாகசம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அழைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகள் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களிலும் உணவகம் மட்டும் செயல்படும். இந்த நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்பவர்கள், சாகசம் செய்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இதற்காக 300 இடங்களில் போலீசார் தணிக்கை செய்வார்கள். பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |